×

திமுக அமைப்பாளர் நாஜிம் அறிவிப்பு பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து காங்கிரசார் தெருமுனை பிரசாரம்

காரைக்கால், அக்.30:  மக்கள் விரோத பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து காரைக்காலில் தெருமுனை பிரசாரத்தை புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்தும், பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சியை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யவேண்டும் என உத்தரவிட்டதையடுத்து,  காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் பாஜக அரசு மீது எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகள், ஊழல்கள் உள்ளிட்ட பலவற்றை பட்டியலிட்டு துண்டு பிரசுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை மக்களிடையே வழங்கி தெருமுனை பிரசாரம் செய்யும் நிகழ்ச்சியை, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.பிரசாரத்தின் போது,

அமைச்சர் கமலக்கண்ணன் கூறியது: மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை சந்தித்துவிட்டனர். நேர்மையான அரசு நிர்வாகம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜகவின் ஊழல்கள் குறித்து மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். துல்லியமாக அவர்கள் செய்த ஊழல்கள், மக்கள் விரோத போக்குகளைப் பட்டியலிட்டு துண்டுப் பிரசுரங்களாக காங்கிரஸ் கட்சி வழங்கி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தலின் பேரில் இந்த ஏற்பாட்டை புதுவை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரத்தை காங்கிரசார் வழங்கி வருகிறார்கள். இந்தப் பணி காரைக்கால் மாவட்டம் முழுவதும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தில் முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து, கட்சி நிர்வாகிகள் சிங்காரவேலு, அசோகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Najim ,DMK ,announcement ,Congress ,government ,BJP ,party street protests ,
× RELATED காரைக்கால் அருகே அம்பாள்...