×

கெங்கவல்லி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி அடிப்படை வசதி வேண்டும்

சேலம், அக்.30:கெங்கவல்லியை அடுத்த வீரகனூரில், ஆக்கிரமிப்புகளை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நரிக்குறவர்கள் மனு அளித்துள்ளனர். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கெங்கவல்லியை அடுத்த வீரகனூரைச் சேர்ந்த நரிக்குறவர்கள் திரண்டு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘வீரகனூர் நரிக்குறவர் காலனியில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அரசு சார்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்ைத, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பழுதடைந்த வீடுகளிலும், குடிசையிலும் வசித்து வருகிறோம். எனவே, ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ேமலும், எங்கள் பகுதிக்கு குடிநீர், தெருவிளக்கு மற்றும் சுகாதார வளாகம் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்,” என்றனர்.

Tags : Removal ,occupations ,Kankavalli ,facilities ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...