×

நாகலாபுரம் மனோ கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்

விளாத்திகுளம்,அக்.30: நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மையமும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.     முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் ஆல்ட்ரின் அதிசயராஜ், பொருளாதார ஆசிரியர் சுரேஷ்பாண்டியன் முன்னிலை வகித்தனர். செஞ்சிருள் சங்க ஒருங்கிணைப்பாளர் செண்பகராஜ் வரவேற்றார்.நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருமால்முருகன் சிறப்புரையாற்றி, பொது மருத்துவ பரிசோதனை செய்தார். சித்தமருத்துவர் விஜயலதா நிலவேம்பு கசாயம் வழங்கினர். கண்பரிசோதகர் முத்துராமலிங்கம் கண் பரிசோதனை செய்தார்.அசோக்குமார் நன்றியுரை ஆற்றினார். முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை செஞ்சிருள் சங்க மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

Tags : camp ,Nagalapuram Mano College ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு