×

நாசரேத் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நாசரேத்,அக்.30: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நேச்சர் கிளப் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். உள்தர உறுதிப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் மேக்ஸ்வெல் சாமுவேல் முன்னிலை வகித்தார். நேச்சர் கிளப் ஒருங்கிணைப்பாளர் பிராங்மெரின், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அந்தோணி செல்வகுமார் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் விளையும் தீமைகளை கோஷமிட்டும், கையில் பதாகைகளுடன் சென்றனர். பேரணி கல்லூரி வளாகத்திலிருந்து புறப்பட்டு வாழையடி, அகப்பைக்குளம், லூக்கா மருத்துவமனை, சந்தி வழியாக நாசரேத் பேருந்து நிலையம் வரை சென்றது. நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் பேரணியை முடித்து வைத்தார்.  பேரணியில் திட்ட அலுவலர் கீதாஞ்சலி, சாமுவேல், ஜெயப்பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை கல்லூரிச் செயலர் எஸ்.டி.கே. ராஜன், முதல்வர் அருள்ராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : wave awareness rally ,Nasserat College ,
× RELATED நாசரேத் கல்லூரியில் தேசிய ஒற்றுமை தினம்