×

மறியலில் ஈடுபட்ட 920 சத்துணவு ஊழியர்கள் கைது * பணி புறக்கணிப்பால் சத்துணவு சமைத்தல் பாதிப்பு * தற்காலிக பணியில் மகளிர் குழுவினர் ஈடுபட்டனர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்

திருவண்ணாமலை, அக்.30: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 920 பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளிகளில் சத்துணவு சமைக்கும் பணியில் மகளிர் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.மிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாநில அளலான தொடர் போராட்டங்களை நடந்து வருகிறது. அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கடந்த 25ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுெபறும் அமைப்பாளருக்கு ஒட்டுமொத்த தொகையாக ₹5 லட்சம், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ₹3 லட்சம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் கடந் 25ம் தேதி முதல் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு முன்வராததால், நேற்று முதல் சமையல் செய்யாமல் வேலையை புறக்கணித்து, மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் அண்ணாதுரை தலைமையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது.இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 160 ஆண்கள், 670 பெண்கள் உட்பட மொத்தம் 920 போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில், சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்துஎமகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மூலம், பள்ளிகளில் அவசர அவசரமாக சத்துணவு சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்கள் பள்ளிகளில் சத்துணவு வழங்கும் பணியை கண்காணித்தனர். ஒருசில இடங்களில், தினக்கூலிக்கு ஆட்களை பணியமர்த்தி சத்துணவு சமைக்கப்பட்டது.
சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை, பள்ளிகளில் சமையல் செய்யமாட்டோம் என அறிவித்துள்ளதால், இந்த போராட்டம் முடியும் வரை மகளிர் குழுவினர் மற்றும் தினக்கூலி ஆட்கள் மூலம் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்துள்ளனர்.(செய்திஎண்02) கல்லூரி காவலாளி உட்பட 3 பேரை தாக்கி ₹1.90 லட்சம் கொள்ளை

Tags : nurses ,Ladies ,office ,Thiruvannamalai Collector ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து