பைக் ரேஸ்: 4 வாலிபர்கள் கைது

வேளச்சேரி, அக். 30: அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு சிலர் காந்தி மண்டபத்தில் இருந்து பட்டேல் சாலை வழியாக பைக் ரேசில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அவர்கள் வாகனத்தைத் துரத்திச் சென்று மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் அந்த வாகனங்களை மடக்கி நிறுத்தினர். விசாரணையில், மயிலாப்பூரைச் சேர்ந்த சந்தோஷ் பால் (20), முகேஷ்  (19), அகிலன் (20), ஜோசப் (23) என்றும், தப்பி ஓடியவர் செல்வம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

× RELATED பைக் ரேஸ் விபத்து மேலும் ஒருவர் பலி