×

கண்டலேறு அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம் எதிரொலி சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

* நாள் ஒன்றுக்கு 35 கோடி லிட்டர் தண்ணீர் குறைக்க உத்தரவு
* வடகிழக்கு பருவமழையை நம்பி காத்திருக்கும் அதிகாரிகள்
* கோயில் கோயிலாக சிறப்பு பிரார்த்தனை செய்யும் பரிதாபம்

சென்னை, அக். 30: கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் எதிரொலியை தொடர்ந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் தேவைக்காக வடகிழக்கு பருவமழையை நம்பி அதிகாரிகள் கோயில் கோயிலாக சிறப்பு பிரார்த்தனை செய்யும் பரிதாப நிலை உள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய 4 ஏரிகள் உள்ளது. 11 டிஎம்–்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் இருந்து தான் சென்னை குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுதவிர கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி மூலம் தண்ணீரும், தெலுங்கு கங்கை திட்டம் மூலம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் பெறப்படுகிறது. இதில், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 13 டிஎம்சியாக நீர் இருப்பு குறைந்துள்ளதால் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில், நான்கு ஏரிகளை நம்பி தான் சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. 4 ஏரிகளின் நீர் மட்டம் 1.4 டிஎம்சியாக உள்ளது. ஏற்கனவே சோழவரம் ஏரி முற்றிலுமாக வறண்டு விட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் 241 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போதைய நிலையில் பூண்டி, புழல் ஏரியில் இருந்து தான் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏரியில் இருக்கும் நீர் மட்டத்தை வைத்து 40 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே, இனி வரும் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும். இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த மழை பெய்தால் மட்டுமே அடுத்து வரும் மாதங்களில் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்பதால், பொதுப்பணித்துறை, மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் ஒவ்வொரு கோயிலாக மழை பெய்ய வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை மாநகரில் குடிநீர் விநியோகத்தை 35 கோடி லிட்டர் குறைக்கவும் அதிகாரிளுக்கு அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகரில் தினமும் 80 கோடி லிட்டர் குடிநீருக்கு தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில் 50 கோடி லிட்டர் தான் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4 ஏரிகளில் தண்ணீர் குறைந்து வருவதால், தொடர்ந்து இந்த நீரை கூட குடிநீருக்காக விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படிபட்ட சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால், சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு போய் உள்ள நிலையில், கல்குவாரிகள் உள்ள நீரை வைத்து சில நாட்கள் மட்டுமே விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அந்த தண்ணீரும் 45 நாட்களுக்கு கூட போதுமானதாக இருக்காது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்கினால் மட்டுமே குடிநீர் பிரச்சனையை வரும் காலத்தில் சமாளிக்க முடியும்’ என்றார்.     

தற்போதைய நிலையில் 50 கோடி லிட்டர் தான் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4 ஏரிகளில் தண்ணீர் குறைந்து வருவதால், தொடர்ந்து இந்த நீரை கூட குடிநீருக்காக விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படிபட்ட சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால், சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது              

Tags : Chennai ,
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...