×

இறால் விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கோரிக்கை மனு

சீர்காழி,அக்.26: இறால் விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சீர்காழியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் இறால் விவசாயிகள் இறால் வளர்ப்பு தொழில்நுட்ப வல்லுனர்கள், இறால் பண்ணை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பூம்புகார் சங்கர், பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு புதிய லைசென்ஸ் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் மானியம் வழங்கியதை ஹெக்டருக்கு ரூ.3 லட்சமாக மானியதொகை உயர்த்தி வழங்க வேண்டும், தரமான இறால் குஞ்சுகள் மற்றும் தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களை தரக்கட்டுபாடு செய்து தகுந்த அங்கீகாரத்தின் கீழ் நியாயமான விலையில் வழங்க வேண்டும், மின்சார கட்டணத்தை அண்டை மாநிலமான ஆந்திர அரசு இறால் விவசாயிகளுக்கு வழங்கும் அதே விலையில் தமிழக அரசும் வழங்க வேண்டும், இறால் பண்ணைகளுக்கு மின் இணைப்பு வழங்கும் போது மின்மாற்றிகளுக்கு வைப்புக்கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்,

விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்குவது போல் இறால் விவசாயிகளுக்கு ஏரேட்டர், நீர் இறைப்பான்கள் மற்றும் வலைகளை மானிய விலையில் ஆண்டுதோறும் வழங்கிட வேண்டும், மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும், அன்னிய செலவாணியில் பெரும் பங்கு கொள்ளும் இறால் விவசாயிகளிடம் மிரட்டி தண்டல், லஞ்சம் கேட்கும் சமூக விரோதிகளின் மீது தகுந்த கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, இறால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். குறைந்த விலைக்கு தமிழக இறால் விவசாயிகளிடம்  கொள்முதல் செய்யும் போக்கை ஏற்றுமதியாளர்கள் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், உள்நாட்டில் இறால்களை சந்தைப்படுத்தி குறைந்தபட்ச  அடிப்படை ஆதார விலைக்கு  விற்றுக்கொள்ள பொதுசந்தைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தரவேண்டும்,

இறால் விவசாயிகளுக்கு தனிநல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 23 அம்ச  கோரிக்கைகள் கொண்ட மனுவை அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இது குறித்து தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய தீர்வுகாணப்படும் என்றார். அப்போது இறால் பண்ணை அதிபர்கள் பழையார் நற்குணன், நாராயணசாமி, சரவணன், ரூபஸ்ராஜன், ரத்தினசபாபதி, ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : petitioner ,OM Maniyan ,shrimp farmers ,
× RELATED வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே...