ஆண்டிமடம் பகுதியில் கைவரிசை திருட்டு வழக்கில் இருவர் கைது

ஜெயங்கொண்டம்,அக்.26: ஆண்டிமடம் பகுதியில் திருட்டு வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ஆண்டிமடம் இந்தியன் வங்கி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியே வந்த சந்தேகத்திடமான இருவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரித்ததில் முன்னுக்கு பின் பேசியதால் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில்  இருவரும் அழகாபுரம் கிராமம் வீராசாமி (26), சங்கர் (24) என தெரியவந்தது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் ஆண்டிமடம் தில்லை நகரில் வசிக்கும் ஆசிரியர் பாலகுமார் வீட்டில் கொள்ளையடித்தது மற்றும் கடந்த 12ம் தேதி பரணி மஹால் தெருவை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் செல்வராஜ் திருப்பதி சென்றிருந்தபோது அவரது வீட்டில் புகுந்து பணம் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் இருந்த 44 கிராம் தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Related Stories:

More