×

திருமலைராயன்பட்டினத்தில் ரூ.13.50 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி எம்எல்ஏ கீதா ஆனந்தன் துவக்கி வைத்தார்

காரைக்கால்,அக்.26: காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் ரூ.13.50 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணியை, தொகுதி எம்எல்ஏ கீதா ஆனந்தன் துவங்கி வைத்தார். திருமலைராயன்பட்டினம் தொகுதியை சேர்ந்த விஎஸ் நகரின் உள்புறச் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், மழைக்காலத்தில் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. எனவே, இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், எம்எல்ஏ கீதா ஆனந்தன், புதுச்சேரி அரசிடம் பேசி, ஊரக பகுதிகளில் அடிப்படை குடிமை வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் இதர மேம்பாட்டு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கான எஸ்.சி.எஸ்.பி. திட்ட நிதி ரூ.13.50 லட்சத்தில், சாலைகளை மேம்படுத்த புதுச்சேரி அரசு ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து, இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தொகுதி எம்எல்ஏ கீதாஆனந்தன் கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ், உதவி பொறியாளர்  லோகநாதன், இளநிலை பொறியாளர் மெய்யழகன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். சாலை மேம்பாட்டுப் பணிகள் 3 மாத காலத்துக்குள் முடிவடையும் என ஆணையர் ஜான் அரோலியஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Geeta Anandan ,road development workshop ,Tirumalaiyirappatinam ,
× RELATED தோகைமலை பகுதியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட பணி