×

நீடாமங்கலத்தில் ஐயப்ப பக்தர்கள் கண்டன பேரணி

நீடாமங்கலம், அக்.26: நீடாமங்கலத்தில் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில்,  செயலாளர் முத்துகுருசாமி, தலைவர் ஜெயக்குமார்,  பொருளாளர் காமராஜ் முன்னிலையில் நேற்று அண்ணாசிலை அருகில் உள்ள முச்சந்தியம்மன் கோயிலிலிருந்து  பழைய நீடாமங்கலம்  ஐயப்பன் கோயில் வரை கண்டன பேரணி நடந்தது. பேரணியில் அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லலாம் என்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags : Ayyappa ,devotees ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை