×

18 எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லும் என கோர்ட் தீர்ப்பு அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

லால்குடி, அக்.26: 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் தீர்ப்பு செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் நேற்று தீர்ப்பளித்தார். இதனை வரவேற்று லால்குடியில் அதிமுகவினர் ஒன்றிய செயலாளர்  சூப்பர் நடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் முன்னாள் எம்எல்ஏ பாலன், நகர செயலாளர்கள் சந்திரசேகரன், பூவாளூர் ஜெயசீலன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்  ரீனாசெந்தில்,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் கூகூர் செல்வழகன், நன்னிமங்கலம் ஆறுமுகம், ஆங்கரை குணசேகரன், பெருவை கேசவன், பொருளாளர் திருநாவுக்கரசு, டோமினிக் அமல்ராஜ் மற்றும் அதிமுக நகர, ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
துறையூர்: துறையூரி–்ல் 18 எம் எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும்  என உயர்நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில் துறையூர் ஒன்றிய நகர அதிமுக செயலாளர் சேனை செல்வம், செக்கர் ஜெயராமன் தலைமையில் தொணடர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில்  மாவட்ட துணைத் தலைவா ரெங்கராஜ், ஒட்டம்பட்டி தங்கராஜ், கவுன்சிலர் கண்ணன், வழக்கறிஞர் ராஜசேகர், செல்வராஜ், மருதமுத்து, செல்வம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கிணற்றில் விழுந்த கோழிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
மணப்பாறை, அக்.26: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நொச்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். கோழி கூண்டில் கட்டியிருந்த கோழிகளை ராஜேஸ்வரி அவிழ்த்து விட்டிருந்தார். அப்போது கோழி ஒன்றும், சேவல் ஒன்றும் வேகமாக பறந்து ஓடியபோது அருகில் உள்ள இருதயம். என்பவருக்கு சொந்தமான 70 அடி ஆழ வறண்ட கிணற்றில் விழுந்தது. அதையடுத்து கோழிகளை மீட்க மணப்பாறை தீயணைப்பு துறைக்கு  தகவல்  அளித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களின் உதவியோடு கிணற்றுக்குள் இறங்கி உயிரோடு இருந்த கோழிகளை பிடித்து சாக்குப்பையில் போட்டு கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கோழிகளின் உயிர்களையும்  மதித்து உடனடியாக விரைந்து வந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை பாராட்டினர்.

Tags : hostess ,
× RELATED கொரோனா ஊரடங்கில் மன அழுத்தம் தொகுப்பாளினி தற்கொலை