×

காரியாபட்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

காரியாபட்டி, அக்.26: காரியாபட்டியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. காரியாபட்டி பேருந்து நிலையம் அருகில் காவல்துறை மற்றும் எஸ்.பி.எம் தொண்டு நிறுவனம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் டெங்குவை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி.எம் டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி வரவேற்றார்.

அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் பரிமளச்செல்வன் டெங்கு காய்ச்சலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். எஸ்.ஐ ராமசந்திரன்ல, காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகளில் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். விபத்துக்களில் கைப்பற்றிய வாகனங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : landflow ,Kariapatti ,
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...