×

முயல் வேட்டையாடிய 9 பேருக்கு அபராதம்

கடையம், அக். 26:  கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடக்கு மடத்தூர் பகுதியில் நாய்கள் உதவியுடன் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் நெல்லை நாயகம், வனவர் முருகசாமி, வனக்காப்பாளர் மணி, வனக்காவலர்கள் சேகர், ரமேஷ்பாபு, வேட்டை தடுப்புக்காவலர்கள் பசுங்கிளி, மாரியப்பன், வேலுச்சாமி, முத்துக்குமார், சக்திமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  சம்பவ பகுதியில் வடக்கு மடத்தூரைச் சேர்ந்த முத்துராஜ், கோபாலகிருஷ்ணன், சண்முகதுரை, பத்திரகாளி, வெங்காடம்பட்டியைச் சேர்ந்த குமார், சுடலை, பார்த்திபன், சேர்வைகாரன், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் நாயை வைத்து முயல் வேட்டையாடி கொண்டிருந்தனர்.

அனைவரையும் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.  மேலும் துணை இயக்குநர் ஓம் காரம் கொம்மு உத்தரவின் பேரில், அவர்களிடம் ரூ.1.85 லட்சம் அபராத கட்டணமாக வசூலிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இறந்த நிலையில் முயல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் கூறும்போது, வனப்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் முயல், உடும்பு, நரி, எறும்புத் திண்ணி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகும். எனவே இதுபோன்ற வேட்டையில் ஈடுபடுவோர் குறித்து கடையம் வனத்துறையில் புகார் தெரிவிக்கலாம், என்றார்.

Tags : rabbit hunters ,
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா