×

நெல்லை மேற்கு மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

நெல்லை, அக். 26:நெல்லை மேற்கு மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், குற்றாலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் புலவன் சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். துணை தலைவர் சக்திவேல் முருகன், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர்கள் ராமர் (கீழப்பாவூர்), குமார் (சேரை), நகர தலைவர்கள் மாடசாமி (சுரண்டை), ராயகிரி மாரிமுத்து (ராயகிரி), தமிழ்நாடு நாடார் பேரவை அவை தலைவர் அமிர்தவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள், 50 இடங்களில் கட்சி கொடிக்கம்பம் அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Nellai West District ,executives ,PPP ,
× RELATED திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகத்துறை நிர்வாகிகள் கூட்டம்