சாலைப்புதூர் மதகில் இருந்து ஆலந்தா புதுக்குளத்திற்கு தனி கால்வாய் பிரபாகரன் எம்பி ஆய்வு

பாவூர்சத்திரம், அக். 26: கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கழுநீர்குளம், கல்லூத்து, முத்துகிருஷ்ணப்பேரி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் ஆலந்தாபுதுக்குளத்திற்கு, கடம்பன்குளத்தில் இருந்து தண்ணீர் வரும். கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி காரணமாக இந்த குளம் நிரம்பவில்லை.
இந்தாண்டு இந்த பகுதியில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி விட்ட நிலையில், ஆலந்தா புதுக்குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. இப்பகுதி பொதுமக்கள், பிரபாகரன் எம்பியிடம் குளத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டனர்.

இதையடுத்து பிரபாகரன் எம்பி  சாலைப்புதூர் மதகில் இருந்து, கடம்பன்குளத்திற்கு செல்லாமல் தனி கால்வாய் மூலம் ஆலந்தா புதுக்குளத்திற்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டம் தீட்டுவது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து புதிதாக தனிகால்வாய் அமைக்கும் பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியின்போது அதிமுக இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சேர்மபாண்டி, பேரூர் செயலாளர் ஜெயராமன், பெத்தநாடார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ராதா, அப்பாத்துரை, ராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Aluanda Puducakulam ,Maruthurthur ,
× RELATED பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதார மந்தநிலை: ஆய்வில் தகவல்