×

சங்ககிரி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிக்கு 3 ஆண்டு சிறை

சங்ககிரி, அக்.26: சங்ககிரி அருகே காஞ்சம்பாளையம் குருமன்காட்டை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி நல்லம்மாள் (57). இவர்கள் தங்களது பேத்தி சந்தியாவுடன், காஞ்சம்பாளையத்தில் இருந்து காளிப்பட்டி நோக்கி கடந்த 3.8.2004ம் தேதியன்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ரவுடிகள் 3 பேர், குப்பன் பைக் மீது அவர்களுடைய பைக்கை மோதவிட்டு கீழே விழ செய்தனர். பின்னர் நல்லம்மாளை மிரட்டி, அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். இது தொடர்பாக சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, ராசிபுரம் அக்கரைப்பட்டியை சேர்ந்த கோபி, சேலம் தம்மம்பட்டியை சேர்ந்த சையத்,

கடலூர் காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த கலியபெருமாள் ஆகிய மூவரை கைது செய்தனர். இந்த வழக்கு சங்ககிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்தது. இதனிடையே ஜாமீனில் வெளியே வந்த 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதில், ரவுடி கோபியை, மாநகர போலீசார் என்கவுண்டரில் கொன்றனர். சையத்தை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். கலியபெருமாள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். நேற்று வழக்கு விசாரணை முடிவில், சையத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் ராஜேந்திரகண்ணன் தீர்ப்பு வழங்கினார்.

Tags : Rowdy ,jail ,march ,Sankagiri ,
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...