×

திருத்தணி நகராட்சியில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்

திருத்தணி, அக். 26: திருத்தணி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அங்கீகாரமில்லாத மனை பிரிவுகள் மற்றும் கடந்த 2016ம் ஆண்டு, அக்டோபர் 20ம் தேதிக்கு முன் விற்பனை செய்யப்பட்ட மனைகளை வரன்முறை செய்வதற்கான சிறப்பு முகாம், நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மல்லிகா முகாமை துவக்கி வைத்தார். நகரமைப்பு ஆய்வாளர் தயாநிதி, பொதுப்பணி மேற்பார்வையாளர் நீலநாராயணன், வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், 50 பேர் மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பம் செய்தனர்.இதுகுறித்து நகரமைப்பு ஆய்வாளர் தயாநிதி கூறுகையில், ‘திருத்தணி நகராட்சி எல்லைக்குள் அனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் வரன்முறைபடுத்தாத மனை பிரிவுகளை வரும் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, தங்களது மனைக்கான பத்திரம், பட்டா, வில்லங்க சான்று, மனை பிரிவு வரைபடம் மற்றும் மனையின் உரிமையாளர் புகைப்படம் ஆகியவற்றுடன் நகராட்சியில் பதிவு கட்டணமாக ₹500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மனைகள் வரன்முறைப்படுத்த, ஒரு சதுரடிக்கு ₹20 வீதம் தங்களது மனை சதுரடிகளுக்கு அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளிலும், துண்டுபிரசுரம் மற்றும் ஆட்டோ மூலம் பிரசாரம் செய்து வருகிறோம்’’ என்றார்.


Tags : camp ,municipality ,Tiruttani ,
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு