×

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கருத்தரங்கு

தர்மபுரி, அக்.25: பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், விவசாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், விவசாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம், ஜடையம்பட்டியில் நடந்தது. இதில் கோயமுத்தூர், திருவண்ணாமலை, திருச்சி வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் விதை நேர்த்தி செய்தல், அக்னி அஸ்திரம் தயாரித்தல் ஆகியவற்றுக்கு செயல்விளக்கம் அளித்தனர். இதையடுத்து இளம் விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடல் நடந்தது. இதில் ஜடையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளம் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். தொடர்ந்து கிராம மக்களுடன் இணைந்து கிராமபுற மதிப்பீடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பாப்பாரப்பட்டி அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Seminar ,Paparapatti Agricultural University ,
× RELATED வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம்