×

திண்டுக்கல் லியோனி பேச்சு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள்

தா.பேட்டை, அக்.25: காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமென முசிறி அருகே தண்டலைப்புத்தூர் கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதி முகாம் நிறைவுநாள் விழாவில் கலெக்டர் ராஜாமணி பேசினார்.
முசிறி அருகே தண்டலைப்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு மனுநீதி முகாம் நிறைவுநாள் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து, வருவாய்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பில் 2,377 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது முசிறி தாலுகா வளையெடுப்பு, பைத்தம்பாறை, மாவலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய சாகுபடிகளை அழித்து சேதம் ஏற்படுத்தும் குரங்கு மற்றும் மயில்களின் தொந்தரவினை  கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ செல்வராஜ் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து முசிறி அரசு மருத்துவமனைக்கு வந்த கலெக்டர், குழந்தை பெற்ற தாய்மார்கள் 10 பேருக்கு பரிசுப் பொருட்களும், சத்துமாவுகளை வழங்கினார்.
  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் ராஜாமணி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட குளோரின் கலந்த குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கவும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெங்கு, பன்றிகாய்ச்சல் பரவாமல் இருக்க கூடுதலாக மஸ்தூர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும். தண்ணீரை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும். வீடுகளின் அருகே மழைநீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும். அதையும் மீறி பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட எந்த நோய் தாக்குதல் ஏற்பட்டாலும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். 

Tags : Dindigul Leonie Go ,Government Hospital ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...