×

திருவானைக்காவல் கோயிலில் டிசம்பர் 12ல் கும்பாபிஷேகம்

திருச்சி, அக்.25: பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலம் திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோயில்.
திருவானைக்காவல் கோயிலின் பரிவார சன்னதிகள், கோபுரங்கள், விமானங்கள் சீரமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. திருப்பணி வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதையொட்டி வரும் 28ம் தேதி பாலாலயம் நடை பெற உள்ளது.
பாலாலயத்திற்கான யாகசாலை பூஜைகள் அன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். காலை 6 மணியில் இருந்து 7க்குள் பரிவார மூர்த்திகளின் சன்னதி களில் பாலாலயம் நடைபெற உள்ளது.
கோயில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 12ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை அனுமதி கிடைத்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யாகிறது. காவிரி ஆணையத்தை கலைக்க மத்திய அரசு திட்டம்?
திருச்சி, அக்.25: காவிரி ஆணையத்தை கலைக்க மத்திய அரசு திட்டமிடுவதாக தமாகா விவசாய அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு காவிரி, கோதாவரி உள்ளிட்ட 13 நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை உள்ளடக்கிய மேலாண்மை ஆணையம் தனித்தனியே அமைக்கப்படும். சுழற்சி முறையில் முதல்வர்கள், தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற புதிய மேலாண்மை சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக டெல்டா விவசாயிகள் காவிரி பிரச்னையில் கடந்த 40 ஆண்டுகளாக போராடி பெற்ற உரிமையான காவிரி ஆணையத்தை, மத்திய அரசு அதனை கலைக்கும் வகையில் செயல்படுகிறதா என்ற அச்சம் டெல்டா விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக்குவதற்காக காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறதா என்றும் காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் தோன்றுகிறது.
இதுகுறித்து தமாகா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் கூறுகையில், ‘காவிரி பிரச்னைக்கு ஏற்கனவே பிரதமர் தலைமையில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டு பயனற்ற நிலை ஏற்பட்டதால் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சீர்குலைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுபோல் ஏற்கனவே 13 நதிகளுக்கும் ஆணையங்கள் அமைக்கப்பட்டு சுமூக நிலையில் செயல்பாட்டில் உள்ளது. அதனை முடக்கும் வகையில் மீண்டும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. மேலும் மாநிலங்கள் நீர்ஆதார பிரச்னைகளை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயல்படுவதை உள்ளோக்கத்தோடு தடுக்கப்படுவதால் இந்தியாவின் தேச ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
நாட்டின் சேத ஒற்றுமை மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, நதிகளை தேசிய மயமாக்கி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஆணையங்களின் செயல்பாடுகளை கண்டிப்புடன் கண்காணித்து, அரசியல் தலையீடு இல்லாமல் தேர்தல் கமிஷன்போல் மத்திய நீர்வள ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என கூறினார்.

Tags : Thiruvanaikaval ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில்...