×

மன்னார்குடி சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

மன்னார்குடி, அக். 25: மன்னார்குடி அருகே சேரன்குளத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலமான வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் நடைபெற்று வருகிறது.
வைணவ ஆலயங்களில் ஆண்டு முழுவதும் செய்யப்படும் பூஜை முறைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் சிறுசிறு தவறுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஆண்டுக்கு ஒருமுறை கோயில்களில்  பவித்ர உற்சவம் பத்து தினங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த உற்சவம் நடத்தப்படும் பத்து தினங்களில் வருடம் முழுவதும் கோயிலில் செய்யப்படும் பூஜைகள் அனைத்தும் செய்யப்படுகிறது.
இதன்படி மன்னார்குடி அருகே உள்ள  பிரசித்தி பெற்ற வைணவ தலமான  சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் துவங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உற்சவர் சீனிவாசப் பெருமாள் பவித்திர மாலைகளை அணிந்து கோயிலை வலம் வந்தார். அப்போது தீட்சிதர்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாடியபடி வந்தனர். அதனைத் தொடர்ந்து யாகசாலை முன்பு பெருமாள் எழுந்தருளியபோது பூர்ணாகுதி நடத்தப்பட்டது.
பின்னர் கொடிமரத்தின் அருகே கும்ப ஆரத்தியும், அதனை தொடர்ந்து கற்பூர ஆரத்தியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூரில்

Tags : Pavithra Utsavam ,Mannargudi Cherankulam Venkatajalapathy Perumal Temple ,
× RELATED திருப்பதியில் வருடாந்திர பவித்ர உற்சவம் துவக்கம்