கும்பகோணம், அக். 25: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள 16 சோடஷலிங்க சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. இதில் ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முக்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், புரணேஸ்வரர், கோனேஷ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபாகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என 16 சிவலிங்கங்கள் உள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ மகாலிங்க சுவாமிகள் என அழைக்கப்படும். ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சோடஷ மாகலிங்க சுவாமிகளுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அன்னாபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதேபோல் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயில், வியாழசோமேஸ்வரன் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கவுதமேஸ்வரர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், கம்பட்ட விசுவநாதர் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் அபயவரதேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோல் அதிராம்பட்டினம் பிள்ளைமார் தெரு காசிவிஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது.