×

கல்லாக்கோட்டை கிராமத்தில் சொட்டு நீர் பாசனத்திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்

கந்தர்வகோட்டை, அக்.25: கந்தர்வக்கோட்டை வட்டம், கல்லாக்கோட்டை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசியதாவது:         இந்த முகாமில் வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 638 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வேளாண்மைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன கருவிகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் மேம்பாடு அடைந்துள்ளது.           கந்தர்வக்கோட்டை பகுதியில் பழுதடைந்த மின்மாற்றிகளை சரிசெய்யும் வகையில் புதிதாக பெறப்பட்ட மின்மாற்றிகளை பொருத்தி சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பள்ளிக்குழந்தைகள் காலையில் பள்ளிக்கு சென்று வரும் வகையில் புதிய பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.
எம்எல்ஏ ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்ஸிகுமார், வட்டாட்சியர் அரமுததேவசேனா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் பதவியேற்பு விழா
புதுக்கோட்டை, அக்.25:  புதுக்கோட்டை  திருக்கோகர்ணம்   வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரிசங்கத்தின்  இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா  நடைபெற்றது. பள்ளியின் இன்ட்ராக்ட் கிளப்பிற்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.   தலைவராக ஆதவ் குகன், செயலாளராக வெங்கடேஸ்வரன், பொருளாளராக முத்து வடிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய உறுப்பினர்களை  வாழ்த்தி செயலாளர் மதிவாணன், துணை ஆளுனர்  வெங்கடாசலம், பள்ளி முதல்வர் கவிஞா் தங்கம் மூர்த்தி ஆகியோர்
பேசினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பசீர் முகமது புதிய உறுப்பினர்களை  வாழ்த்திப்பேசினார்.முன்னதாக தலைவர் ஓவியர்  ரவி வரவேற்றார். முடிவில் இன்ட்ராக்ட் செயலாளர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.

Tags : village ,Kallakottai ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...