×

மணமேல்குடி அருகே கட்டுமாவடி அரசு பள்ளி வளாகத்தை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்

மணமேல்குடி, அக்.25:  மணமேல்குடி அருகே கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 மணமேல்குடி அருகே கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்  500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மழைக்காலம் தொடங்கி விட்டதால் இந்த பள்ளியை சுற்றிலும் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து பள்ளி வளாகம் முழுவதும் தேங்கி கிடக்கிறது.
இதனால் இந்த தண்ணீரில் கொசு, விஷப்பூச்சிகள் உற்பத்தியாகிறது. மாணவர்கள் பள்ளி மைதானத்தில் விளையாடும்போது தண்ணீரில் இருக்கும் விஷப்பூச்சிகள் மாணவர்களை  கடித்து விடுகிறது .மேலும் டெங்கு பன்றிக்காய்ச்சல் பரவிக்கொண்டிருப்பதால் மாணவர்கள் நலன்கருதி கட்டுமாவடி  மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் கழிவு நீரை  வெளியேற்றி பள்ளி வளாகத்தை சீரமைத்து தரவேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாகும். மாணவ, மாணவிகள் கடும் அவதி

Tags : building ,premises ,Manamkuldi ,Kumbavavi Government School ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...