×

திருப்புவனத்தில் விவசாய பணிகள் ஜரூர்

திருப்புவனம், அக்.25: தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் திருப்புவனத்தில் விவசாய பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
திருப்புவனம் பகுதியில் ெதன்மேற்கு பருவமழை ஓரளவு பெய்துள்ளது. இதனால் கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதுபோக வைகை ஆற்றில் இருந்தும் பாசன நீர் வருகிறது. இதனால் மக்கள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாற்றாங்கால் உழவு, விதைக்கும்பணி, நாற்று எடுக்கும் பணி, நடவுப்பணி என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின்மோட்டார், ஆயில் எஞ்சின் மூலம் கிணறுகளிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

பூவந்தியில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள காந்திமதி அம்மாள் கூறுகையில், ‘‘கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி நிலவி வந்தது. சொந்தமாக கிணறு மோட்டார் பாசனம் இருந்தாலும் கிணற்றில் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. கிணறை ஆழப்படுத்தியதாலும் தொடர்ந்து பெய்த மழையாலும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மின்சாரம் தடையின்றி வந்தால் மோட்டார் தொடர்ந்து 8 மணிநேரம் இயங்கும். தண்ணீர் பற்றாக்குறை இன்றி கிடைக்கும். எனது ஐந்து ஏக்கர் பயிரையும் காப்பாற்றி அறுவடை செய்யலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது’’ என்றார்.

Tags :
× RELATED பிளஸ் 2 தேர்வில் ரமணவிகாஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி