×

ஜூனியர் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வீரருக்கு வரவேற்பு

பணகுடி, அக். 25:  அர்ஜென்டினாவில் நடந்த ஜூனியர் ஒலிம்பிக்கில், இந்திய அணி சார்பில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக தடகள வீரர் பிரவீனுக்கு வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளியில் வரவேற்பு விழா நடந்தது.. பள்ளி தாளாளர் திவாகரன், பிரவீனுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பயிற்சியாளர்கள் இந்திரா, ஜாய் மரகதம் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.பின்னர் பிரவீன் கூறுகையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு. அதற்கான பயிற்சியில் முழு கவனம் செலுத்துவேன், என்றார்.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஆறுமுககுமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags : Jr. ,player ,Olympic Games ,
× RELATED ஜெயம் ரவியின் ஜீனி செகண்ட்லுக் வெளியீடு