×

கூம்பு வடிவ ஒலிபெருக்கியால் மாணவர்கள் அவதி

அஞ்சுகிராமம், அக். 25:  கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் ஏற்படும் அளவுக்கு அதிகமான ஒலி மாசு மனிதர்களுக்கும் சூழலியலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவை. இதனால் மன உளைச்சல், ரத்த அழுத்தம், காது கேளாமை  மற்றும் தூக்கமின்மை ஏற்படுகிறது.இந்த ஒலி மாசை கட்டுப்படுத்துவது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டதையடுத்து, கடந்த 2005ம் ஆண்டு கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் தடை செய்யப்பட்டன. ஆனால் குமரி மாவட்டத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள், அரசியல் கூட்டங்கள் போன்றவற்றில் விதிமுறைகளை மீறி அவை தொடர்ந்து பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. இதனால் தேர்வு நேரங்களில் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.  மேலும் சிலர், தங்கள் வாகனங்களில் அபாய ஒலி, அலறல் சத்தம் போன்ற ஒலிகளில் ஹாரன்களை பொருத்திக் கொண்டு, சாலைகளில் செல்வோரை பீதியடையச் செய்து மகிழ்கின்றனர். இதனால் முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் போன்றவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.  சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒலி மாைச கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED குமரி அரசு மருத்துவக்கல்லூரியில்...