×

தலைவாசல் அருகே வேளாண் விழிப்புணர்வு முகாம்

ஆத்தூர், அக்.23: தலைவாசல் அருகே, விவசாயிகளுக்கு வேளாண் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, புளியங்குறிச்சி கிராமத்தில் நேற்று விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தி முறையில், நவீன ெதாழில் நுட்பங்கள், இயற்கை நுண்ணுட்ட முறை குறித்து, பெரம்பலூர் ரோவர் வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம் அளித்தனர். தலைவாசல், ஆத்தூர், மல்லியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நுண்ணுட்ட கரைசல், பஞ்சகாவ்ய கரைசல், இஞ்சி, பூண்டு, முட்டை கரைசல் ஆகியவைகளின் செயல் முறை, பாத்தி கட்டும் முறைகள் குறித்து மாணவர்கள் விளக்கினர்.
மேலும் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், அருகில் உள்ள வேளாண் நிலையத்தினை அணுகலாம் எனவும் விவசாயிகளுக்கு மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags : awareness camp ,Thalassery ,
× RELATED ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்