×

பாக்கிதொகை கேட்டவரை தாக்கிய டீக்கடைக்காரர், மகன் மீது வழக்கு

திருச்சி, அக்.23: திருச்சி ஒத்தக்கடை புதுத்தெருவை சேர்ந்தவர் பவுல்ராஜ் (57). இவர் வில்லியம்ஸ் ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் காலை பென்வெல்ஸ் ரோட்டைச் சேர்ந்த சேவியர் (46) என்பவர் கடையில் டீ குடித்து முடித்தபின், ரூ.100ஐ கொடுத்தார். சில்லறை இல்லை, சிறிது நேரம் கழித்து வாங்கிக்கொள்ளும்படி கடைக்காரர் கூறியதால் சேவியர் சென்றுவிட்டார்.  பின்னர் இரவு 10 மணியளவில் சேவியர் கடைக்கு சென்று காலையில் டீ குடித்துவிட்டு பணம் கொடுத்தேன். சில்லறை இல்லை என்றதால் பணத்தை கொடுத்துவிட்டு சென்றேன்,

மீதி தொகை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பவுல்ராஜ் மற்றும் அவரது மகன் மணிகண்டன் (35) இருவரும் பணம் எப்போது கொடுத்தாய் எனக்கேட்டு வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் சேர்ந்து சேவியரை தாக்கினர். இதில் காயமடைந்த சேவியர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த கன்டோன்மென்ட் போலீசார் தந்தை, மகன் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : defendant ,
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை...