×

வலங்கைமான் அருகே பயரி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மீன் வளர்ப்பு அனுபவ பகிர்வு முகாம்

வலங்கைமான், அக். 23: வலங்கைமான் அடுத்த பயரி கிராமத்தில் ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண்மை அனுபவ பகிர்வு முகாமில் மீன் வளர்ப்பு தொடர்பாக பகிர்ந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா உசிலம்பட்டியில் உள்ள ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண்மை அனுபவ பகிர்வு முகாமில் வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில்  பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் வலங்கைமான் அடுத்த தெற்குபட்டம் ஊராட்சி பயரி கிராமத்தில் கிருஷ்ணமணி ஒரு ஏக்கர் பரப்பளவில்  அமைந்துள்ள மீன் பண்ணையில் மீன் வளர்த்தல், பராமரித்தல், விற்பனை செய்தல் பற்றி பகிர்ந்து கொண்டனர்.  மீன் பண்ணையின் அடி மட்டம் 5 அடியாகவும் அதில் நீர் மட்டம் 3 அடியாகவும் பராமரிக்கப்படுகிறது.

இதில் கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய மூன்று ரக மீன் வகைகளை சேர்ந்த மூவாயிரம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகிறது. இதில் ஆறுமாத வயது மீன்கள் நாற்றங்கால் குளத்தில் வளர்க்கப்பட்டு பின்னர் மீன் குளத்தில் ஓராண்டு வரை வளர்க்கப்படுகிறது. ஓராண்டு முடிவில் ஒரு கிலோ எடை கொண்ட மீன் கிடைக்கிறது. மீன்களுக்கு உணவாக மிதவை தீவணம் அளிக்கப்படுவதால் தீவணம் மண்ணில் கலந்து வீணாவது தடுக்கப்படுகிறது. ஓராண்டு முடிவில் சுமார் ஒரு ஏக்கரில் மூன்று டன் வரை மகசூல் எடுக்கப்படுகிறது என்ற விபரங்கள் விவசாயிடமிருந்து பகிரப்பட்டது.

Tags : village ,fish breeding experience sharing camp ,Valangaiman ,Pori ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி