ஆக்கிரமிப்பு நிலத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை

நாமக்கல், அக்.23:  ஆக்கிரமிப்பு நிலத்தில், சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம், மோகனூர் தாலுகா குமரிபாளையம் ஊராட்சி ஓடப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு விபரம்:

ஓடப்பாளையம் கிராமத்தில் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறவும், விவசாய நிலங்களில் இருந்து ஊர்குட்டைக்கு தண்ணீர் செல்லவும் வடிகால் வசதி இருந்தது. தற்போது, குட்டைக்கு செல்லும் வடிகால் மற்றும் அதை ஒட்டிய சுமார் 10 சென்ட் புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து ஆடு, மாடுகளை கட்டி வைத்துள்ளனர். மேலும், சாராயமும் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். இதனால் மழைநீர் வெளியேற வழியில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற சென்றால், ஊர் மக்களை தகாத வார்த்தையால் திட்டி தாக்க வருகிறார்கள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>