×

பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில் வித்யாரம்பம்

ராசிபுரம், அக்.23:  பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில் விஜயதசமி தினத்தையொட்டி வித்யாரம்ப நிகழ்ச்சி நடந்தது.  விஜயதசமி சிறப்பு நாளில், சேலம் அன்னதானப்பட்டி பாவை வித்யாஷ்ரம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், பாவை வித்யாஸ்ரம் நாமக்கல் மற்றும் சேலம் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, வித்யாரம்ப நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கை நடராஜன்  குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் விசேஷ நாளை கொண்டாடும் நாள் தான் விஜயதசமி. நவராத்திரியில் முப்பெரும் தேவியரின் பூஜை முடிந்த பின்னர் வரும் 10வது  நாளான விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றி அளிக்கும்.  எனவே பாவை பள்ளிக் குழந்தைகள் கல்வியில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று,  குழந்தைகளுக்கு வேத மந்திரங்கள் கூறி, பெற்றோர்களின் கரங்களால் நெல்லில் விரல் பதித்து ‘அ’ என்ற எழுத்தினை எழுதச் செய்து, அட்சராப்பியாசம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் பெற்றோர் மற்றும் சான்றோர்கள் குழந்தைகளை ஆசிர்வதித்தனர்.    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வித்யாஷ்ரம் பள்ளிகள் இயக்குனர் சதிஷ், வித்யாஷ்ரம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர் ஷகிலா பானு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vidyarambam ,schools ,Pavai Vidyashram ,
× RELATED டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு