×

சீராப்பள்ளி பேரூராட்சியில் திமுக சார்பில் நோட்டீஸ் விநியோகம்

ராசிபுரம், அக்.23:  ராசிபுரம் அருகே, சீராப்பள்ளி பேரூராட்சி பகுதிகளில், திமுகவினர் நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.  நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சீராப்பள்ளி பேரூராட்சி பகுதிகளில், மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சரமான காந்திசெல்வன் ஆலோசனைப்படி, அதிமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி தலைமை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Seerapalli ,
× RELATED திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள்