×

பசும்பொன்னில் தேவர் குருபூஜை வாகனங்கள் செல்ல வழித்தடம் அறிவிப்பு

விருதுநகர், அக். 23: தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் சென்று திரும்ப வேண்டும் என மாவட்ட கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அக்.28 முதல் அக்.30ம் தேதி வரை பசும்பொன்னில் 111வது தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில், எஸ்பி ராஜராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், ‘பசும்பொன் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் சென்று திரும்ப வேண்டும். அனுமதி சீட்டு பெற்ற வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதால் சொந்த வாகனங்களில் மட்டும் செல்ல வேண்டும். வாடகை வாகனங்களில், இருசக்கர வாகனங்கள், லாரி, டிராக்டர், சைக்கிள் மற்றும் திறந்த வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. நடைபயணமாகவும் செல்ல அனுமதியில்லை.
வாகனத்தில் ஆயுதங்கள், பட்டாசுகள், மதுபானங்கள் எடுத்து செல்லக் கூடாது. வாகனங்களில் ஒலி பெருக்கி பொருத்த அனுமதியில்லை. வாகனங்களில் செல்வோர் சாதி, மத உணர்வை தூண்டும் வகையில் பேனர்கள், கொடிகளோ கொண்டு செல்ல அனுமதியில்லை.
விருதுநகர் மாவட்டத்திலிருந்து பசும்பொன் செல்ல அனுமதிக்கப் பட்ட வழித்தடங்கள்:
சாத்தூர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி பகுதி
வாகனங்கள்:
அருப்புக்கோட்டை-காந்திநகர்-ராமலிங்காமில்-கல்லூரணி-எம்.ரெட்டியாபட்டி-மண்டபசாலை- கானாவிலக்கு-கமுதி-பசும்பொன் சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப வேண்டும்.
ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணர், கல்குறிச்சி பகுதி வாகனங்கள்:
கல்குறிச்சி, பாலையம்பட்டி பைபாஸ்-காந்திநகர்-ராமலிங்காமில்-கல்லூரணி-எம்.ரெட்டியாபட்டி-மண்டபசாலை- கானாவிலக்கு-கமுதி-பசும்பொன் சென்று மீண்டும் அதேவழியில் திரும்ப வேண்டும்.
திருச்சுழியிலிருந்து
செல்லும் வாகனங்கள்:
ராமலிங்காமில்-கல்லூரணி-கிளாமரத்துப்பட்டி-கமுதி-பசும்பொன் சென்று மீண்டும் அதேவழியில் திரும்ப வேண்டும். முத்துராமலிங்காபுரம், புதூர்,மண்டலமாணிக்கம் வழி செல்ல அனுமதியில்லை.
நரிக்குடியிலிருந்து செல்லும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழி பசும்பொன் சென்று, மீண்டும் அதே வழியில் திரும்பும் போது பசும்பொன், கோட்டைமேடு, நகராத்தார்குறிச்சி, அபிராமம் வழி பார்த்திபனூர், பிடாரிசேரி, வீரசோழன் விலக்கு வழி வரவேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ உதயகுமார், நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Devar Gurupuzha ,Pasumpon ,
× RELATED திருமங்கலத்தில் கோயிலில் மாசி பொங்கல் விழா பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்