×

சிவகாசியில் முருகன் கோயில் விலக்கு சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வலியுறுத்தல்

சிவகாசி, அக். 23: சிவகாசியில் முருகன் கோயில் விலக்கிலிருந்து நாடார் லாட்ஜ் வரை சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகாசியில் உள்ள நான்கு ரத வீதிகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், நகரில்
போக்குவரத்து நெரிசல் குறைந்து வருகிறது. நகரில் முருகன் கோயில் விலக்கில் இருந்து திருத்தங்கல் செல்லும் சாலையில், இருபுறமும் வாகனங்கள் செல்வதால் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாலை நேரங்களில் காரனேசன் காலனி, திருத்தங்கல் சாலைப் பகுதியில் இருந்து சிவகாசி நகருக்குள் வரும் வாகனங்களால் நாடார் லாட்ஜ் பாலத்தில் இருந்து முருகன் கோயில் விலக்கு வரை, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வடக்கு ரத வீதியை ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளனர். இந்த வழியாக வரும் வாகனங்கள் முருகன் கோயில் விலக்கில் இருந்து திருத்தங்கல் சாலையில் செல்லும் வகையில் நாடார் லாட்ஜ் பாலம் வரை வழிபாதையாக மாற்ற வேண்டும்.
மேலும், காரனேசன் காலனி, திருத்தங்கல் சாலை பகுதியில் இருந்து சிவகாசி நகருக்குள் வரும் கார், டூவீலர்களை நாடார் லாட்ஜ் பாலத்தில் இருந்து மருதுபாண்டியர் மடத்து தெரு சாலைக்கு சென்று, அம்பேத்கார் சிலையை அடைந்து, அங்கிருந்து பஸ்நிலையம், என்.ஆர்.கே. ராஜரத்தினம் வீதி செல்லும் வகையில், வாகனங்களை திருப்பி விடப்பட வேண்டும். இதன் மூலம் சிவகாசி நகரில் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும். காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்களில் செல்லலாம்.
எனவே, முருகன் கோயில் விலக்கிலிருந்து, நாடார் லாட்ஜ் பாலம் வரை சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றி, வாகனங்களை ஒரு புறம் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Murugan Temple ,Sivakasi ,roadway ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்