×

தேவகோட்டை ஜி.ஹெச் சாலையில் அட்டகாசம் செய்யும் ஆடுகள்

தேவகோட்டை, அக். 23: தேவகோட்டை அரசு மருத்துவமனை சாலையில் சுற்றித்திரியும் ஆடுகளை அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தேவகோட்டை யூனியன் ஆபிஸ் வீதியில் அரசு மருத்துவமனை, டவுன் போலீஸ் ஸ்டேஷன், கிளை நூலகம், 16வது தொகுதி நகராட்சி நடுநிலைப்பள்ளி, தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளன. மேலும் இச்சாலையை கடந்து தான் அண்ணாநகர், ஜீவாநகர், வீரபாண்டியபுரம், ரெகுநாதபுரம், நித்தியகல்யாணிபுரம், உதையாச்சி, காவனவயல் என பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இவ்வளவு பரபரப்பான சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆடுகள் அதிகளவில் சுற்றிதிரிகின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனை எதிர்புறம் சாலையின் நடுவிலே ஆடுகள் நிற்கிறது. இதனால் வாகனஓட்டிகள் விலகி செல்லும் போது விபத்தில் சிக்கிட நேரிடுகிறது. மேலும் அரசு மருத்துமனைக்குள் புகும் ஆடுகள் நோயாளிகளுக்காக வைத்திருக்கும் உணவுப்பொட்டலங்களை தின்று செல்கிறது. இதனால் வாகனஓட்டிகள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி
வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் ஆடுகளை அப்புறப்படுத்துவதுடன் அதனை திரிய விடும் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : Devagottai GH Road ,
× RELATED செவிலியர் பயிற்சிக்கு செல்பவர்கள் வெளிநாட்டு மொழிகள் கற்க வாய்ப்பு