108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வலியுறுத்தல் காங்.,தலைவர் திருநாவுக்கரசர் பேச்சு திறன் வளர்ப்பு பயிற்சி

சிவகங்கை, அக். 23: சிவகங்கை வியான்னி அருட்பணி மையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், திறள் வளர்ப்பு பயிற்சி நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியாஜாஸ்மின் தலைமை வகித்தார். மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜிம்ஜேசுதாஸ் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பால்ராஜ், இலவச தொலைபேசி சேவை மைய இக்குநர் ஜீவானந்தம், மாவட்ட நன்னடத்தை அலுவலர் குணசேகரன் பேசினர். குழந்தைகள் இல்லங்களின் தரம், குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள், பாலியல் தொந்தரவுகளில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 30 குழந்தைகள் இல்ல நிர்வாகிகள், பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  
நீர்சேமிப்பில் கவனம் செலுத்தினால் வேளாண்மையில் வளம் காணலாம்
காரைக்குடி, அக். 23: மாவட்டத்தில் வேளாண்மையில் வளம் காண வேண்டும் என்றால் நீர்சேமிப்பில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என குன்றக்குடி வேளாண்அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சிவங்ககை மாவட்டத்தில 80000 எக்டேருக்கு மேல் நெல் முதன்மை சாகுபடியாக பயிரிடப்படுகிறது. இதில் 21 சதவீதம் இறவை நடவு பயிராகவும், 50 சதவீதம் நேரடி விதைப்புக்கு பின் இறவை பயிராகவும், 19 சதவீதம் நேரடி மானாவாரி விதைப்பு பயிராகவும் பயிரிடப்படுகிறது. 60 சதவீதம் நெல் சாகுபடி கண்மாய் பாசனத்தை மட்டும் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இதனால் கண்மாய்களே மாவட்டத்தில் வரப்பிரசாதமாக உள்ளன.  தற்போது பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் ஓரளவு நீர் நிரம்பி வருகிறது. சில கண்மாய்களில் தண்ணீர் வரத்து மற்றும் ஆக்கிரமிப்பினால் நிரம்பாமல் உள்ளன. இந்நேரத்தில் நீர்சேமிப்பில் கவனம் செலுத்தினால் வேளாண்மையில் வளம் காணலாம் என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன்   கூறுகையில்,
‘‘மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நடவு மற்றும் விதைப்பு செய்யப்பட்டும், சில இடங்களில் நடவும் நடந்து வருகிறது. எனவே விவாசயத்திற்கு விதைப்பு மற்றும் நடவு பயிர்களுக்கு தற்போது விழுகின்ற மழையே போதுமானது. இதை பயன்படுத்தி களை எடுத்தல் மற்றும் உரமிடுதலை முடிக்க வேண்டும். நடவு செய்கின்றவர்கள் மழையை  பயன்படுத்தி நடவேண்டும். கண்மாயில் உள்ள நீரை பயன்படுத்தாமல் அல்லது சிக்கனமாக பயன்படுத்தினால், வடகிழக்கு பருவமழையில் வருகின்ற மழைநீரை சேமித்து வைத்து வறட்சி வருகின்ற போது நீர் பாய்ச்சி பயிரை காப்பாற்றலாம். கண்மாய்களின் நீரை சிக்கனமாக வீணாக்காமல் பயிருக்கு தேவையான அளவு தேவைப்படும் போது பாய்ச்ச வேண்டும். இதுததவிர கால்வாய்கள் சுத்தமாகவும், மழைநீர் வரத்துகளை பராமரித்தும் வைத்து கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் மடைகளை அடைத்து வைப்பது மிகவும் முக்கியமானதாகும். வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் நீரை சரியான முறையில் சேமித்து, தேவையான அளவு பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிக்கலாம்’’ என்றார். 

Tags : Thirunavukarar ,Ambulance Employees ,
× RELATED தண்ணீர் பிரச்னையை சமாளிக்க...