×

காதல் திருமணம் செய்தவர் மாயம் கணவர் வீட்டு முன் பெண் தர்ணா

மயிலாடுதுறை,அக்.23: மயிலாடுதுறையில் காதல் திருமணம் செய்த கணவர் திடீர் மாயமானார். அவரது வீட்டு முன் பெண் தர்ணர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கீழையூரை சேர்ந்தவர் ஜெயசுதா(26).  இவர் செம்பதனிருப்பு ராமர்கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக்(30) என்பவரை 2012லிருந்து காதலித்து வந்தார். அவர்கள் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி கடலூரில் பதிவு திருமணம் செய்துகொண்டு கீழையூரில் வசித்து வந்தனர். கடந்த 10 தினங்களுக்கு முன் தன் மாமாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பார்க்கப்போகிறேன் என்று கூறி கார்த்திக் சென்றவர் வீடு திரும்பவில்லை, செல்போன்மூலம் தொடர்பு கொண்டும் பேசமுடியவில்லை. கடந்த 18ம்தேதி செம்பதனிருப்பு கிராமத்தில் உள்ள எனது கணவர் வீட்டிற்கு சென்று என் கணவர் எங்கே என்று கேட்டுள்ளார், இங்கே வரக்கூடாது என்று கணவரது தந்தை, தாய், கணவரின் சகோதரர் ஆகியோர் திட்டி விரட்டியுள்ளனர். என் கணவர் வரும்வரைநான் போக மாட்டேன் என்று கூறி அவரது வீட்டு வாசலிலேயே அமர்ந்து விட்டார், இதைக்கண்ட கணவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

ஆனால் ஜெயசுதா எங்கும் செல்லாமல் அவரது வீட்டின் வாசலிலேயே காத்திருந்தார், இதனால் ஆத்திரமடைந்த கணவரது வீட்டார் ஒன்று சேர்ந்து ஜெயசுதாவை தாக்கியும் அவமானப்படுத்தியும் அடித்துள்ளனர். இதனால் மயக்கமடைந்த ஜெயசுதாவை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பாகசாலை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து ஜெயசுதா கூறுகையில்,’நாங்கள் சிதம்பரத்தில் படிக்கும் காலத்திலிருந்தே பழக்கம் ஏற்பட்டது. நான் ஐடி டிப்ளமோ படித்துள்ளேன், அவர் எம்.பி.ஏ படித்துள்ளார். நான் சென்னையில் வேலைபார்த்தபோதும் பழக்கம் ஏற்பட்டது, சாதியை கூறி திருமணத்திற்கு மறுக்கமாட்டேன் என்று கூறியதால்தான் நான் பழகினேன். பல வருடங்களாக நான் கார்த்தி வீட்டிற்கு போவதும் விஷேசம் என்றால் எனக்கும் துணிமணிகள் எடுத்து கொடுப்பதும் வாடிக்கையாக இருந்தது. வருடம் கடக்கிறது திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினேன்.

இதனால் எங்களது ஊரிலேயே கணவர் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டார், அதன்பிறகு கடலூர்சென்று திருமணத்தை பதிவுசெய்து கொண்டோம், இதுகுறித்து கார்த்தியின் தந்தையும் காவல்நிலையம் சென்று எங்களுக்கு திருமணம் நடந்தது, உண்மையா என்று தெரிந்துகொண்டு  சென்றுவிட்டார். கணவரது வீட்டார் எங்களது வீட்டிற்கு வருவதில்லை, நாங்களும் அங்கே போவதில்லை. 3 மாதகாலமாக சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்தி கொண்டிருந்தோம், எனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லை பார்த்து வருகிறேன் என்று கூறி சென்றவரை காணவில்லை அவரை கண்டுபிடித்தும், என்னை அடித்து உதைத்த அவரது உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Dana ,bride ,house ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி