×

மீஞ்சூர் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

பொன்னேரி, அக்.23: மீஞ்சூர் பேரூராட்சியில் டெங்கு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா தலைமை தாங்கினார். பேரூராட்சி அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், தெருக்களில் குப்பைகள் கொட்டக்கூடாது, குடியிருப்பு மற்றும் கடைகள் அமைந்துள்ள பகுதிகளை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும், மழைநீர் கால்வாயில்  அடைப்பு இருந்தால், அதை உடனடியாக அகற்றி சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சுகாதாரத்துறையினர், ஓட்டல் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dengue Awareness Advisory Meeting ,Meyenur Panchayat ,
× RELATED திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்