×

சுக்காலியூர் பிரிவு அருகே தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

கரூர், அக். 23: கரூர் மதுரை பைபாஸ் சாலை சுக்காலியூர் பிரிவு அருகே தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்து அபாயம் உள்ளது. அதிகாரிகல் பார்வையிட்டு விபத்தினை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர்-மதுரை பைபாஸ் சாலை சுக்காலியூர் பகுதியில் இருந்து செட்டிபாளையம், கருப்பம்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை பிரிகிறது. மேலும், பிரதான பைபாஸ் சாலை என்பதாலும் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையின் வழியாக சென்று வருவதால், செட்டிபாளையம் போன்ற பகுதிகளுககு செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், வாகன குறுக்கீடு காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலை சந்திப்பு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட இந்த பகுதியில் மேமபாலம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Sukaliyur ,
× RELATED சுக்காலியூர் அருகே சேதமான மேம்பால நடைபாதையால் பாதசாரிகள் கடும்அவதி