×

சரஸ்வதி வித்யாலயாவில் நவராத்திரி விழா

கிருஷ்ணகிரி, அக்.18: கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் சரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நவராத்திரி கொண்டாட்டம் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. சரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர் சார்பில் நவராத்திரி கொலு மற்றும் சரஸ்வதிதேவிக்கு தினந்தோறும் யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகள் கல்வி நலத்திற்கும், உடல் நலத்திற்காகவும் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர்.   நவராத்திரி விழாவை தாளாளர் சங்கீதாஅன்பரசன் துவக்கி வைத்தார். மேலும் ஏழு பிறப்பை குறிக்கும் வகையில் கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டிருந்ததை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

விழாவினை முன்னிட்டு, நிறுவனர் டாக்டர் அன்பரசன் தலைமையில் பூஜையில் வைத்திருக்கும் சரஸ்வதிதேவியை தேர் மூலம் குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் இருந்து கிராமம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் முரளி, முதல்வர் சத்தியமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். பள்ளி மேலாளர் ரூபேஷ் மேற்பார்வையில் தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Tags : Navarathri Festival ,Saraswathi Vidyalaya ,
× RELATED நவராத்திரி விழா பெரியபாளையத்தம்மன் அலங்காரத்தில் வழிபாடு