சேலம் மாநகாில் சுப்ரீம் மொபைல்ஸ் புதிய கிளை திறப்பு விழா

சேலம், அக்.18:  சேலத்தில், சுப்ரீம் மொபைல்ஸ் புதிய கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுப்ரீம் மொபைல்ஸ்-ன் 34வது புதிய கிளை, சேலம் புதிய பேருந்து நிலையில் மெயின்ரோடு, மெய்யனூரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. புதிய ஷோரூமை எல்ஜி மொபைல்ஸின் கோவை விநியோகஸ்தர் வஸ்திபால் மேத்தா திறந்து வைத்தார். வாரி ஷாப்பிங் மால் உரிமையாளர் தங்கவேல், ஆர்எஸ்எம் அருள்ஜோதி, டெவலப்மென்ட் ஆபீசர் சுரேஷ் மற்றும் மேலாளர் னிவாசன் முன்னிலை வகித்தனர். சுப்ரீம் மொபைல்ஸ் இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், பகவதிராஜா மற்றும் பாரதிசெல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். திறப்பு விழா சலுகையாக ₹2000க்கு மேல் மொபைல் அல்லது அக்சசரீஸ் வாங்குபவர்களுக்கு ₹1000 மதிப்பிலான கேமரா மொபைல் போன் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், டெக்னோ ட்வின் 145 மொபைல் வாங்கினால் சைக்கிள், எல்ஜி க்யூ மொபைல் வாங்கினால் ₹4000 மதிப்பிலான 4ஜி மொபைல் போன், 1000 மதிப்பிலான கேமரா மொபைல் வாங்கினால் ₹1000 மதிப்பிலான சவுபாக்யா குக்கர், எல்ஜி கீ மொபைல் வாங்கினால் கேமரா மொபைல், சோனி ஆர்ஐ பிளஸ் வாங்கினால் ஹெல்மெட், பானோசோனிக் ராய் 100 வாங்கினால் சவுபாக்யா தவா இலவசமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் சுப்ரீம் மொபைல்சுக்கு வருகை தந்து, அப்ரூவ்டு லோன் லிமிட்-ஐ 2 நிமிடங்களில் தெரிந்து கொண்டு, விருப்பமான புதிய ஸ்மார்ட் போனை சுலப தவணையில் பெற்றுக்கொள்ளலாம் என மண்டல விற்பனை மேலாளர்கள் மகேந்திரன், சிவராஜ், பூபாலன், தனசேகர் மற்றும் ராஜசேகர் தெரிவித்தனர்.

வாடிக்கையாளர்களுக்கு எலைட் கார்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் வாங்கும் மொபைல்களுக்கு அவர்களது கணக்கில் போனஸ் புள்ளிகள் ஏற்றப்பட்டு விரும்பும் பொருட்களை சுப்ரீம் ஆப்-ல் வாங்கிக் கொள்ளலாம் என மண்டல விற்பனை மேலாளர் சீனிவாசன், வினோத், தவ்பிக் தெரிவித்தனர்.

சேலத்தில்

Related Stories: