×

அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

திண்டுக்கல், அக். 18:ஆர்விஎஸ் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், பயோெமடிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா தேசிய மாணவர் தினமாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஆர்விஎஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்த நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பத்மநாபன் மற்றம் ஆர்விஎஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு மாணவி திவ்யலட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக திலக்குமார் பங்கேற்று பேசுகையில், ‘மாணவர்கள் கல்வி, ஒழுக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி எடுத்துக்கூறினார். பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு மாணவி செல்வஇ திவ்யா நன்றி கூறினார்.

Tags : Abdulkalam ,Birthday Celebration ,
× RELATED முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து...