×

மதுராந்தகத்தில் இன்று எஸ்.டி.உகம்சந்த் படத் திறப்பு விழா

மதுராந்தகம், அக்.18:  திமுக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான மறைந்த எஸ்.டி.உகம்சந்த் திருவுருவப் படத் திறப்பு விழா இன்று காலை 9 மணியளவில் மதுராந்தகம், செங்குந்தர் அரங்கில் நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சிக்கு காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் மஸ்தான் எம்பி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.முன்னதாக, மதுராந்தகம் நகர முன்னாள் செயலாளர் எஸ்.டி.பிரேம்சந்த் வரவேற்கிறார். இதில், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உகம்சந்த்தின் திருவுருவப் படத்தை திறந்து உரையாற்றுகிறார்.

Tags : SD Uthachandam ,opening ceremony ,
× RELATED புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடம் திறப்பு விழா காண்பது எப்போது?