×

அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சாத்தான்குளம், அக். 17: சாத்தான்குளம் அருகே மீரான்குளம் டி.என்.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை வகித்தார். விழாவில் மாணவர்களுக்கு அப்துல்கலாமின் பொன் மொழிகள் மற்றும் வாழ்க்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளுக்கு கை கழுவதன் அவசியம் குறித்து விவரிக்கப்பட்டது. இதில் ஆசிரியைகள் கெத்சியாள் சுகந்தி, செல்வராணி, சாந்தமலர், அன்னாள், அமலா, தயாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விஜயராமபுரம் _முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்ததினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் கனகா முன்னிலை வகித்தார். விழாவில் மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது.  வென்ற மாணவர்களுக்கு சிவகாசியைச் சேர்ந்த சுப்பையா, மகாலட்சுமி, ஆசிரியை மோனிஷா நந்தினி ஆகியோர் வழங்கினர். உதவி ஆசிரியர் சண்முகராஜ் நன்றி கூறினார்.

சாத்தான்குளம் ராமகோபால கிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் நடந்த அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.  நூலகர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் அப்துல்கலாம் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாரதி கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஈஸ்வர் சுப்பையா, யோகா ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர். இதில் வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். நூலகர் சித்திரைலிங்கம் நன்றி கூறினார்.  குளத்தூர்: குளத்தூர் அருகே உள்ள பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள்விழா கொண்டாப்பட்டது. இதில் கல்வி சங்கத்தலைவர் தாளமுத்து தலைமை வகித்தார்.

ஊர்த்தலைவர் சின்னச்சாமி, துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை திலகசெல்வி வரவேற்றார். ஆசிரியை காந்திக்கனி தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், அப்துல்கலாம் வாழ்க்கை குறித்து நாடகம், பேச்சுப்போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை மரியஅனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.  புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குட்ஷெப்பர்டு மாடல் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ மாணவியர் அப்துல்கலாம் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் டாக்டர். பத்மினி வள்ளி, ஆசிரியர் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags : Birthday celebration ,
× RELATED முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து...