×

சங்கரன்கோவிலில் வேலப்ப தேசிக சுவாமிகள் 318வது குருபூஜை விழா

சங்கரன்கோவில், அக். 17:  சங்கரன்கோவில் மேல ரதவீதியிலுள்ள வேலப்ப தேசிக சுவாமிகள் மடத்தில், வேலப்ப தேசிக சுவாமிகள் 318வது குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி குருமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பாராயணம், தீபாராதனை,  புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது. விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,  தென்மண்டல மேலாளர் ராமச்சந்திரன், கோயில் துணை ஆணையர் செல்லத்துரை,  சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன், கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர்  பட்டமுத்து, சைவ சித்தாந்த சபை தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சண்முகவேலு  ஆவுடையப்பன், ஆசிரியர் கணேசன் மற்றும் ராகவேந்திரா அறக்கட்டளையினர்  உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : festival ,Gurupooja ,Sankarankovil ,
× RELATED நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழா