×

மேற்கு வங்க மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வங்காள மொழி தெரிந்தவர்களை தேடும் கல்வித்துறை

நாகர்கோவில், அக்.17: மேற்கு வங்க மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வங்காள மொழி தெரிந்த தன்னார்வலர்களை கல்வித்துறை தேடி வருகிறது.
குமரி மாவட்டத்தில் தொழில் ரீதியாக மேற்கு வங்காளத்தில் இருந்து புலம்பெயர்ந்து செங்கல் சூளைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிசெல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இக்குழந்தைகளின்எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கல்வி வசதி அளித்திடும் வகையில்கண்டறியப்பட்ட குழந்தைகள் பயிலுவதற்கு ஏற்ப அருகாமையிலுள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சிறப்பு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இக்குழந்தைகள் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியமொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. அவர்களுடைய தாய் மொழியான வங்காள மொழிகற்பிக்கப்பட வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அதன்படி, வங்காள மொழி பயின்ற, புலமை வாய்ந்த தன்னார்வலர்கள் தங்களுடைய முழு விவரப்பட்டியலை 20.10.2018-க்குள் கூடுதல் முதன்மைக் கல்விஅலுவலர் அலுவலகத்தில் (கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணையத பள்ளிக் கல்வித் திட்டம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகம், நாகர்கோவில்-1,கன்னியாகுமரி மாவட்டம்) சமர்ப்பிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : learners ,Education Department ,West Bengal ,
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு