×

கோடப்பமந்து கால்வாயை தூர்வாரும் பணி தீவிரம்

ஊட்டி,அக்.16: ஊட்டி கோடப்பமந்து கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலா  நகரமான ஊட்டி நகாின் நடுவே கோடப்பமந்து பகுதி முதல் ஊட்டி ஏாி வரை சுமாா் 4  கி.மீ., தூரத்திற்கு கோடப்பமந்து கழிவுநீர் கால்வாய் உள்ளது.இந்த  கால்வாயின் இருபுறமும் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து  வெளியேற்றப்படும் கழிவுநீா் ஊட்டி ஏாிக்கு செல்கிறது. இந்த கால்வாய் கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு தூா்வாறப்பட்டது. இருந்த ேபாதும் மண் கழிவுகள்,  பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து  காணப்படுகிறது.அவ்வப்போது பொதுப்பணித்துறை  சார்பில் கோடப்பமந்து கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது. ஊட்டி படகு இல்ல சாலையில் ரயில்வே காவல் நிலையம் எதிரே உள்ள கோடப்பமந்து  கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில், குப்பைகள் குவிந்து காணப்பட்டன. இதனால்,  கழிவுநீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மழை காலங்களில்  மழைநீர் செல்ல வழியின்றி படகு இல்ல சாலையில் தேங்கின. இதனைதொடர்ந்து  கால்வாயில் மிதக்கும் பிளாஸ்டிக் மற்றும் மண் கழிவுகளை அகற்றிடும் பொருட்டு  ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இப்பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். கழிவுநீர்  சீராக செல்லும் வகையில் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags :
× RELATED கூடலூர் அருகே காட்டு யானைகளிடம்...