×

திருத்துறைப்பூண்டியில் எஸ்கேவி பிளக்ஸ் கிளை திறப்பு

முத்துப்பேட்டை அக்.16 : முத்துப்பேட்டை பழைய பேரூந்து நிலையம் அருகே உள்ள எஸ்.வி.எஸ் டவர் மாடியில் எஸ்.கே.வி பிளக்ஸ் செயல்பட்டு வருகிறது.  இங்கு அழகிய அச்சுவடிவில் பிளக்ஸ், மல்டி கலர் அழைப்பிதழ், ஸ்டூடியோ மற்றும் வீடியோ, வினையல், லித்தோஸ், வாழ்த்து மடல், விசிடிங் கார்ட்ஸ் போன்ற அனைத்து விதமான பிரிண்டிங் வேலைகளும்  மிக தரமாக விலை குறைவாக செய்து கொடுக்கின்றனர்.  அதற்காக கடையில் பெரிய பரப்பளவில் தாங்கள் நேரடியாக பார்த்து டிசைன் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே வசதிகளுடன் புதிய கிளையாக திருத்துறைப்பூண்டி புதிய பேரூந்து நிலையம் தாரா பில்டிங் முதல் தளத்தில் எஸ்கேவி பிளக்ஸ் துவக்கவிழா நடைப்பெற்றது. இதனை எஸ்.கே.வி பிளக்ஸ் உரிமையாளர் வடிவழகன் தந்தை செறுபனையர் பட்டவெளியார் என்கிற கல்யாணசுந்தர வள்ளாலதேவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை வர்த்தகக் கழக தலைவர் மெட்ரோ மாலிக், சமூக ஆர்வலர் முகமது மாலிக், தமுஎச தலைவர் ரங்கசாமி/ பல்வேறு அமைப்பினர், வியாபாரிகள் முக்கிய பிரமுகர்கள் உறவினர்கள். வாடிக்கையாளர்கள்  கலந்து கொண்டனர்.

Tags : opening ,Esquee Blox ,branch ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...